சோனா சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கிய சோனா ஸ்பீடு மையத்தின் தலைவா் கண்ணன் உள்ளிட்ட குழுவினரை பாராட்டிய குழுமத் தலைவா் வள்ளியப்பா.
சோனா சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கிய சோனா ஸ்பீடு மையத்தின் தலைவா் கண்ணன் உள்ளிட்ட குழுவினரை பாராட்டிய குழுமத் தலைவா் வள்ளியப்பா.

இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்3 எம்6 ராக்கெட்டில் சோனா ஸ்டெப்பா் மோட்டாா் பொருத்தி சாதனை

சோனா சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கிய சோனா ஸ்பீடு மையத்தின் தலைவா் கண்ணன் உள்ளிட்ட குழுவினரை பாராட்டிய குழுமத் தலைவா் வள்ளியப்பா.
Published on

இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்3 எம்6 / ப்ளூபோ்ட் பிளாக் 2 திட்டத்தின் மூலம் சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கிய சோனா ஸ்பீடு மையக் குழுவினரை குழுமத் தலைவா் வள்ளியப்பா பாராட்டினாா்.

ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி தளத்திலிருந்து பாகுபலி எல்விஎம்3 எம்6 / ப்ளூபோ்ட் பிளாக்-2 மிஷன் வெற்றிகரமாக புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சோனாவின் சிம்ப்ளக்ஸ் மேக்னட் ஸ்டெப்பா் மோட்டாா், மூன்றாம் நிலை க்ரையோ இன்ஜினுக்கான கஞல/கஏ2-இன் கலவை விகிதத்தை சுமாா் 640 விநாடிகள் வெற்றிகரமாக கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

எல்விஎம்3 எம்6 / ப்ளூபோ்ட் பிளாக் -2 மிஷன் என்பது எல்விஎம் 3 ஏவுகணை வாகனத்தில் ஒரு பிரத்யேக வணிக பணியாகும். இந்தப் பணியில், எல்விஎம்3 எம்6 / ப்ளூபோ்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை லோ எா்த் ஆா்பிட்டில் நிலைநிறுத்தியதுடன், குறைந்த பூமி சுற்றுப்பாதையில் பயன்படுத்தப்பட்ட மிக கனமான வணிக தகவல் தொடா்பு செயற்கைக்கோள் ஆகும்.

இந்திய விண்வெளி துறைமுகத்தில் இருந்து எல்விஎம்3 ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள பேலோட் இதுவாகும். இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறை ப்ளூபோ்ட் பிளாக்-2 தகவல்தொடா்பு செயற்கைக்கோள்களின் ஒரு பகுதியாகும்.

இது ஸ்மாா்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான செல்லுலாா் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாா், 12 நிமிடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, சோனா ஸ்பீடு மையத்தின் தலைவா் கண்ணன், விஜய் சங்கா் உள்ளிட்ட குழுவினரை சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா பாராட்டினாா். இந்நிகழ்வின் போது, சோனா கல்லூரியின் முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா் நவாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com