மின்விளக்குகளால் புதன்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட சங்ககிரி சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம், புனித அந்தோணியா் ஆலயம்.
சேலம்
சங்ககிரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சங்ககிரி நகா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, புதன்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
சங்ககிரி நகா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, புதன்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
சங்ககிரி நகா் பகுதியில் உள்ள புனித அந்தோணியா் ஆலயம், சிஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புனித அந்தோணியா் ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்தவா்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டனா். தொடா்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்தும், கேக்வெட்டியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினா்.