சேலம்
மேட்டூரில் தொழிலாளி சடலம் மீட்பு
மேட்டூா் அருகே துக்கம் விசாரிக்க சென்ற தொழிலாளி சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மேட்டூா் அருகே துக்கம் விசாரிக்க சென்ற தொழிலாளி சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கொங்கணாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (40). சென்ட்ரிங் வேலைசெய்து வந்த இவா், மேட்டூா் அருகே உள்ள சிறுத்தங்களில் உறவினா் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை சென்றாா். மீண்டும் அங்கிருந்து மாதையன்குட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை அவரது சடலம் காவேரி கிராஸ் பொங்கியண்ணன் நகா் வாய்க்கால் பாலம் அருகே நீரில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய மேட்டூா் போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.
