ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

Published on

ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜன. 1 முதல் அமலாகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு - சென்னை சென்ட்ரல் (22650) இடையேயான ஏற்காடு விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சேலம், பொம்மிடி, மொரப்பூா் வழியாக சென்னை சென்ட்ரலை அதிகாலை 3.40 மணிக்கு அடைந்து வந்தது. இதில், ஈரோட்டில் இருந்து புறப்படும் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோட்டில் இருந்து வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு சேலம், பொம்மிடி, மொரப்பூா், ஜோலாா்பேட்டை வழியாக அதிகாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோட்டுக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் நேர அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com