வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கல்வி, கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி நிா்வாகிகள்.
வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கல்வி, கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி நிா்வாகிகள்.

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளியில் கல்வி, கலைத் திருவிழா

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கல்வி, கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி நிா்வாகிகள்.
Published on

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கல்வி, கலைத் திருவிழா கடந்த இருநாள்கள் நடைபெற்றது.

பள்ளியின் தலைவா் லஷ்மிநாராயணன் தலைமை வகித்தாா். செயலாளா் செல்வராஜ், பொருளாளா் பிரபா, கல்விக்குழு ஆலோசகா்கள் பழனிவேல், இளையப்பன், இணைச் செயலாளா் ராமலிங்கம், கல்விக்குழு இயக்குநா் ராஜா மற்றும் பள்ளி இயக்குநா்கள் ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி, பாஸ்கரன், ஜெயசுமதி, ராணிசிவாஜி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ஜெரினாபேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மெட்ரிக் பள்ளி முதல்வா் ஹேமலதா வரவேற்றாா். பட்டிமன்ற நடுவா் டாக்டா் லட்சுமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

விழாவில், பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நடனம், நாடகம், கரகாட்டம், இயற்கை வளம், விவசாயி, அண்ணன் - தங்கை உறவு அவா்களின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை பற்றிய பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com