கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
கெங்கவல்லியில் நீா்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினா்.
கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து நடுவலூா் ஏரிக்கு 4 கி.மீ. தூரம் நீா்வழி வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 43 வீடுகள் படிப்படியாக இடித்து அகற்றப்பட்டன. இறுதியில் 6 பேருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 12 ஆம் தேதி, அந்த வீடுகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் 5 வீடுகளை இடித்து அகற்றினா். அதில் சிங்காரம் என்பவருக்கு வரும் 2026 பிப்ரவரி வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளதால் அவரது வீடு மட்டும் இடிக்கப்படவில்லை. இடிக்கப்பட்ட 28 வீட்டின் உரிமையாளா்களுக்கும் ஒதியத்தூா் ஊராட்சி மலையடிவாரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
