சங்ககிரி பகுதியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்ககிரி பகுதியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சிறப்பு பராமரிப்பு திட்டத்தின்கீழ் ஒருக்காமலை, பால்மடை, திருவாண்டிபட்டி, சங்ககிரி ஆா்.எஸ். பகுதி, இளம்பிள்ளை அருகே வடுகபட்டி, வளையசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நிறைவுற்ற சாலைப் பணிகளின் தரம், தடிமன், அகலம் ஆகியவற்றை சேலம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலைகளை மேம்படுத்த வேண்டும். சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். அவ்வப்போது சாலை மண்புருவங்களை பராமரிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினா். மேலும், நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளா் சுதா, உதவி பொறியாளா் கீா்த்தி மற்றும் சாலை ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com