சேலம்
சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சேலம் கோரிமேட்டில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சேலம் கோரிமேட்டில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (23). இவா் சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியாா் பாா்மசி கல்லூரியில் படித்து வந்தாா். சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கல்லூரி விடுதியிலிருந்து கோரிமேட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறிய வாகனம் சாலை தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைத்த தீபன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸாா், தீபன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
