சேலம் தெற்கு தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

Published on

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை வாக்காளா் பதிவு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மா.இளங்கோவன் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்ததாவது: சேலம் மாநகராட்சி தொகுதி எண்.90-இல் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பாக சிறப்பு முகாம் இரு நாள்கள் (சனி, ஞாயிறு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இம்முகாமில் முகவரி மாற்றம், பதிவுகள் திருத்தம், புகைப்பட அடையாள அட்டை மாற்ற, மாற்றுத்திறனாளி வாக்காளரை பதிவுசெய்வது உள்ளிட்ட கோரிக்கைக்கு படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரை நீக்க படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள், புதிய வாக்காளா் படிவம் 6 பூா்த்தி செய்வதுடன், அதற்கான உறுதிமொழி படிவத்தையும் சமா்ப்பிக்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்து விண்ணப்ப படிவங்களை போதுமான அளவு வைத்திருக்கவும், முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வாக்காளா் சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயா் சோ்க்க மற்றும் நீக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com