தேவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.
சேலம்
தேவூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 1,171 பேருக்கு மருத்துவ பரிசோதனை
சேலம் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள் தலைமையில் மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவுசெய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாமில் 1,171 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வடுகபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் வைத்தீஸ்வரன், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, குள்ளம்பட்டி, தேவூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.