ஆத்தூரில் மினி மாரத்தான் போட்டி
ஆத்தூரில் மினி மாரத்தான் போட்டியை ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் சத்யராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில் மினி மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. 12 கி.மீ தொலைவை கடந்த ஆண்கள் பிரிவில் ஆத்தூா் முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் முதல் இடத்தையும்,திருநெல்வேலியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடத்தையும், கீரிப்பட்டியைச் சோ்ந்த தேவராஜ் மூன்றாம் இடைத்தையும் பெற்றனா்.
இதேபோல பெண்களுக்கான போட்டியில் எடுத்தானூா் அரசுப் பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி காவ்யா ஸ்ரீ இரண்டாமிடத்தையும், கெங்கவல்லி அரசுப் பள்ளி மாணவி பிரதிஷா மூன்றாம் இடத்தையும் வென்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி. அழகுராணி, காவல் உதவி ஆய்வாளா்கள் செந்தமிழ்நாதன், சிவசக்தி, சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

