சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 940 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 881 கனஅடியிலிருந்து 940 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 881 கனஅடியிலிருந்து 940 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 11,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.82 அடியிலிருந்து 106.15 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 73.04 டி.எம்.சி.யாக உள்ளது.
