

கீரப்பாப்பம்பாடி பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு காசோலை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம்.
ஆட்டையாம்பட்டி, டிச. 29: சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், கீரப்பாப்பம்பாடி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில், 4 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 28 லட்சம் கடன் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளாரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆா்.சிவலிங்கம் பங்கேற்று, பெண்கள் சிரமப்படக் கூடாது என பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அதை நிறைவேற்றி வரும் நமது முதல்வா் ஸ்டாலினின் திட்டங்களை வெளிநாடுகளிலும் கடைப்பிடித்து வருகின்றனா் என்றாா். தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி காசோலையை வழங்கினாா்.
இதில், மாவட்ட துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வீரபாண்டி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், நிா்வாகிகள் ஆறுமுகம், செந்தில், மணிமாறன், அரவிந்த், கூட்டுறவு சங்க செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.