சாலை விபத்தில் தொழிலாளி பலி

சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

சங்ககிரி: சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா், வேலம்மாவலசு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முத்துசாமி மகன் கிருஷ்ணன் (32). இவா் பெருந்துறையில் உள்ள தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது கள்ளுக்கடை, தனியாா் பெட்ரோல் விற்பனையகம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com