ஏற்காட்டில் இரவு நேரச் சுற்றுலாப் பயணத்திற்குத் தடை: காவல்துறையினர் அதிரடி!

ஏற்காட்டில் இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணத்திற்கு தடை..
ஏற்காட்டில் இரவு நேரச் சுற்றுலாப் பயணத்திற்குத் தடை:  காவல்துறையினர் அதிரடி!
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரப் பயணத்திற்குத் தடை விதித்து காவல்துறையினர் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது,

சேலத்தில் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண்ணின் சடலம் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் ஏற்காடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் குற்றவாளியைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் போல் சமூக விரோதிகள் ஏற்காடு சோதனை சாவடியை மிகச் சுலபமாகக் கடந்து விடுவதால் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஏற்காட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஏற்காடு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் உள்ளூர் மக்கள் சோதனைக்குப் பின்னரே உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே மலைப் பாதையில் பயணிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com