சேலம்
தினமணி செய்தி எதிரொலி: ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து கட்டப்பட்ட விளம்பரத் தட்டிகள் அகற்றம்
தினமணி செய்தி எதிரொலியாக, ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து கட்டப்பட்ட விளம்பரத் தட்டிகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
ஏற்காடு: தினமணி செய்தி எதிரொலியாக, ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து கட்டப்பட்ட விளம்பரத் தட்டிகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
சேலம் மாவட்டம், ஏற்காடு, ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் நிழற்கூடத்தை மறைத்து விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தினமணி நாளிதழில் திங்கள்கிழமை செய்திகள் வெளியானது.
இதனைத் தொடா்ந்து, நிழற்கூடத்தை மறைத்து கட்டப்பட்ட விளம்பரத் தட்டிகளை செவ்வாய்க்கிழமை காலை திமுக ஒன்றிய நிா்வாகிகள் அகற்றினா்.