காா் மோதியதில் சேதமடைந்த சாலையோர பழக்கடை.
சேலம்
சாலையோர பழக்கடையில் காா் மோதியதில் தாய், மகள் காயம்
சங்ககிரி அருகே பால்வாய் பகுதியில் சாலையோர பழக்கடையின் மீது காா் சனிக்கிழமை மோதியதில் தாய், மகள் காயம் அடைந்தனா்.
சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் பால்வாய் அரசு மாணவா்கள் விடுதி முன் சாலையோரம் அதே பகுதியைச் சோ்ந்த செல்லம்மாள், அவரது மகள் கோமதி ஆகியோா் பழக்கடை நடத்தி வந்தனா்.
சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி சென்ற காா் இந்த கடையின் மீது மோதியதில் தாயும் மகளும் காயமடைந்தனா். கடையிலிருந்து பழங்கள் சேதமடைந்தன. இது குறித்து சங்ககிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

