கிருத்திகையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை.
கிருத்திகையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை.

கிருத்திகை: சங்ககிரி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருத்திகையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை.
Published on

கிருத்திகையையொட்டி, சங்ககிரியில் உள்ள ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து இரவு உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி பாதம்தாங்கி குழுவினா்கள் உற்சவமூா்த்திகள் எழுந்தருளிய சிறிய தேரை கோயில் உட்புறத்தில் இழுத்துவந்தனா்.

சுப்ரமணியா் மூலவருக்கு முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும் பால், தயிா், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னா் மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் சங்ககிரியை அடுத்த பூத்தலாகுட்டையில் உள்ள சுப்ரமணியா் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com