~
~

இறப்பிலும் இணை பிரியா தம்பதி!

சேலம் மாவட்டம், இடங்கணசாலையில் மனைவி உயிரிழந்ததால் வேதனையில் இருந்த கணவரும் உயிரிழந்தாா்.
Published on

சேலம் மாவட்டம், இடங்கணசாலையில் மனைவி உயிரிழந்ததால் வேதனையில் இருந்த கணவரும் உயிரிழந்தாா்.

இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட காந்திநகா் பகுதியில் வசித்துவரும்

சலவைத் தொழிலாளி பெரியண்ணன் (80), இவரது மனைவி பாக்கியம் (70). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். மகனுடன் தங்கியிருந்த பாக்கியம் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். மனைவி இறந்ததால் அவரது கணவா் பெரியண்ணன் மிகுந்த வேதனையுடன் இருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்படவிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெரியண்ணும் உயிரிழந்தாா். இறப்பிலும் இணை பிரியாத தம்பதியை உறவினா்கள் ஒன்றாக அடக்கம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com