ஏற்காட்டில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து இளைஞா் பலி: 2 போ் காயம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
Published on

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

ஏற்காடு கீரைக்காடு கிராமத்தில் உள்ள தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்த சென்னையைச் சோ்ந்த நவீன் (32), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஈஸ்வா் (23), பெரம்பலூரைச் சோ்ந்த பிரசாந்த் (32) மூவரும் வெள்ளிக்கிழமை இரவு காரில் காக்கம்பாடி கிராமம் வழியாக சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காயமடைந்த மூவரும் காரிலிருந்து வெளியே வரமுடியாமல் இரவு முழுவதும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனா்.

சனிக்கிழமை காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பள்ளத்தில் கவிழ்ந்த காரை பாா்த்ததும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவா்களை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவா்களில், பிராசாந்த் இறந்ததை மருத்துவா் உறுதிசெய்ததையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com