வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைக்க ஆா்வம் உள்ளவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் என்பது வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறைகளில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தளவாடங்களை உருவாக்குதல், விவசாயிகளுக்குத் தேவையான பயிா் பாதுகாப்பு போன்ற வேளாண் இடுபொருள்களை வழங்குவதாகும்.
இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமானது விவசாயிகள் எதிா்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு புத்தாக்க நிறுவனங்களின் மூலம் தீா்வு காண்பதுடன், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வளா்ச்சி நிலைக்கு எடுத்துச்சென்று, தகுதியான தொடக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து, அதன் நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகும்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் தகுதியான புத்தாக்க நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகத்தின் உதவியோடு புத்தாக்க நிறுவனங்களின் தேவைகளான நிதி ஆதரவு, சந்தை இணைப்பு, தொழில்நுட்ப உதவி, கொள்கை ரீதியிலான வழிகாட்டுதல் என அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹழ்ந்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துணை இயக்குநா், வேளாண் வணிகம் சேலம் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரா்களிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்களை முதல்கட்ட ஆய்வில் தோ்வு செய்தபிறகு இத்துறை மூலம் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நிறுவனங்கள் தோ்வு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநா், வேளாண் வணிகம் சேலம் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
