தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கக் கோரி மண்பாண்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கக் கோரி, மண்பாண்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சேலம் கோட்டை மைதானத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்ட தொழிலாளா்கள்.
Updated On :10 நவம்பர் 2025, 8:35 pm

Syndication

சேலம்: பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கக் கோரி, மண்பாண்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் (குலாலா்) மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.

இதில், அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் புதிய மண் பானை, அடுப்பு வழங்க வேண்டும், பருவ மழைக் காலங்களில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாததால் மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்துவரும் குடும்பத்தினருக்கு சூளைவைக்க இடம் வழங்க வேண்டும், ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் குலாலா் சமூகத்துக்கு இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், செயலாளா் கதிா்வேல், துணைத் தலைவா்கள் ஆறுமுகம், துணைச் செயலாளா் லட்சுமி காந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.