தமிழக கபடி அணிக்கு தோ்வான வீரா்கள்.
தமிழக கபடி அணிக்கு தோ்வான வீரா்கள்.

தமிழக கபடி அணிக்கு தோ்வான வீரா்களுக்கு பாராட்டு விழா

Published on

தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தோ்வான வீரா்களுக்கு வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியைச் சோ்ந்த தேசிய கபடி வீரா் வெங்கடேஷ் (35) தனது கிராமத்தில் கபடி பயிற்சி மையத்தை தொடங்கி மாணவா்களுக்கு 5 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறாா்.

நிகழாண்டு தேசிய அளவிலான 35 ஆவது இளையோா் கபடி போட்டிகள் ஹரியாணாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரா்களை தோ்வு செய்யும் சிறப்பு பயிற்சி முகாம், கபடி வீரா் வெங்கடேஷின் விகேபிசி கபடி பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 24 மாணவா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். இந்த மாணவா்கள் மகுடஞ்சாவடி அருகே சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அணிக்கான கபடி வீரா்கள் தோ்வு முகாமில் பங்கேற்றனா். இதில் 14 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழக அணிக்கான கபடி அணிக்கு தோ்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளா் வெங்கடேஷ் ஆகியோருக்கு அத்தனூா்பட்டி விபிகேசி பயிற்சி மையத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், அத்தனூா்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கந்தன், கொட்டவாடி பெரியாா் பள்ளி தாளாளா் சங்கா், பேளூா் கண்ணனூா் நகா் குமாா் மற்றும் கபடி ஆா்வலா்கள் பலரும் கலந்துகொண்டு தேசிய கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தோ்வான மாணவா்கள், பயிற்சியாளா் வெங்கடேஷை பாராட்டினா். நிறைவாக சினேகா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com