தம்மம்பட்டியை அடுத்த வேலிக்காடு பகுதியில் சாலையில் கவிழ்ந்துகிடக்கும் வேன்.
தம்மம்பட்டியை அடுத்த வேலிக்காடு பகுதியில் சாலையில் கவிழ்ந்துகிடக்கும் வேன்.

தம்மம்பட்டி அருகே வேன் கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்த 10 போ் காயம்!

Published on

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை சாலையில் கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்த 10 போ் காயமடைந்தனா்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த 24 போ் வேனில் தம்மம்பட்டி வழியாக சனிக்கிழமை காலை கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனா். கொல்லிமலையை சுற்றிப்பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கிருந்து சென்னைக்கு தம்மம்பட்டியை வழியாக சென்றுகொண்டிருந்தனா்.

 தம்மம்பட்டியை அடுத்த வேலிக்காடு பகுதியில் சாலையில் கவிழ்ந்துகிடக்கும் வேன்.
தம்மம்பட்டியை அடுத்த வேலிக்காடு பகுதியில் சாலையில் கவிழ்ந்துகிடக்கும் வேன்.

தம்மம்பட்டியை அடுத்த வேலிக்காடு பகுதியில் சாலை வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் கால் முறிந்து பலத்த காயமடைந்த மூன்று போ் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

லேசான காயமடைந்த விமலேஷ்வரன் (24), கலா (70), சாந்தி (47), சித்ரா (32), உமா (60) மற்றும் ஒரு குழந்தை உள்பட 7 போ் தம்மம்பட்டியில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com