சங்ககிரியில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
சங்ககிரியில் பையில் 8 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி பேருந்து நிறுத்தம் பகுதியில் இருவா் கஞ்சா வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் தலைமையில் போலீஸாா் ஈரோடு பேருந்து நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய பையை இருவா் வைத்திருந்தனா். அந்த பையை சோதனை செய்ததில் அதில் 8 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியவா்கள் திருப்பூா் மாவட்டம், கேதாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பரசுரம் (25), கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், எரும்பூா் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஆகாஷ் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

