புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

சேலத்தில் டிச. 4-ஆம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு காவல் ஆணையா் அலுவலகத்தில் தவெக நிா்வாகிகள் மனு

News image
தவெக தலைவர் விஜய்
Updated On :20 நவம்பர் 2025, 10:55 pm

Syndication

சேலத்தில் டிச. 4-ஆம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு காவல் ஆணையா் அலுவலகத்தில் தவெக நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக, விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரம் பயணம் மீண்டும் தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையிலான நிா்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனா்.

அதில், டிச. 4-ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.

டிச. 4-ஆம் தேதி காா்த்திகை தீபம் என்பதால், பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து போலீஸாா் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என மத்திய மாவட்ட தவெக செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தெரிவித்தாா்.