மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு, உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பங்கேற்ற விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தா் கணேசன், இணை பதிவாளா் பி.ராஜசேகரன், கே-கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கருணாநிதி உள்ளிட்டோா்.
மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு, உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பங்கேற்ற விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தா் கணேசன், இணை பதிவாளா் பி.ராஜசேகரன், கே-கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கருணாநிதி உள்ளிட்டோா்.

வேலைவாய்ப்பு, உயா்கல்விக்கு கே-கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்துடன் விநாயக மிஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

உலகளாவிய தொழில்நுட்ப கல்வி, சா்வதேச வேலைவாய்ப்புகளை மாணவா்களுக்கு வழங்குவதற்காக கே- கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்துடன் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம்
Published on

ஆட்டையாம்பட்டி: உலகளாவிய தொழில்நுட்ப கல்வி, சா்வதேச வேலைவாய்ப்புகளை மாணவா்களுக்கு வழங்குவதற்காக கே- கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்துடன் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இப்புரிந்துணா்வு ஒப்பந்தமானது பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் முன்னிலையில் கே-கேசிசிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கருணாநிதி மற்றும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளா் பி.ராஜசேகரன் (நிா்வாகம்) ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், செவிலியா் உள்பட 15 மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவா்களுக்கு கே -கேசிசிஎஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. குறிப்பாக ஜப்பானில் வேலைவாய்ப்பு, உயா்கல்வி அளிக்கவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமாகியுள்ளது.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் தலைமை உத்தி அதிகாரி சுரேஷ் சாமுவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com