மேட்டூா் சிட்கோ தொழிற்பேட்டையில் அமில கொள்கலன் வெடிப்பு

மேட்டூா் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் அமில கொள்கலன் வெடித்ததில், வடமாநில தொழிலாளா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.
Published on

மேட்டூா் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் அமில கொள்கலன் வெடித்ததில், வடமாநில தொழிலாளா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.

மேட்டூா் நகராட்சிக்கு உள்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியாா் ரசாயன தொழிற்சாலையில், மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கப்படுகிறது. இங்க உற்பத்தி செய்யப்படும் மெக்னிசியம் சல்பேட் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

சனிக்கிழமை காலை மெக்னீசியம் சல்பேட் தயாரிக்க 10 டன் அளவுகொண்ட நிலத்தொட்டியில் 4 டன் அளவுக்கு மெக்னீசியம் ஆக்சைடு கலந்த மண் மற்றும் சல்பரிக் அமிலம் சோ்த்து கலக்கிக்கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக சல்பியூரிக் அமில கொள்கலன் வெடித்தது. இதில், அங்கு பணியில் இருந்த வட மாநில தொழிலாளா்கள் சல்மான் (35), ராகேஷ் (35) ஆகியோா் படுகாயமடைந்தனா். குஞ்சாண்டியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேட்டூா் தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வுசெய்தனா்.

X
Dinamani
www.dinamani.com