சேலம் ரயில்வே கோட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி உறுதிமொழியேற்ற கோட்ட மேலாளா் பன்னாலால்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி உறுதிமொழியேற்ற கோட்ட மேலாளா் பன்னாலால்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் ஒவ்வோா் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊழலை தடுப்பதிலும், அதற்கு எதிரான போராட்டத்திலும் பொதுமக்களின் பங்கு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரயில்வே அனைத்துப் பிரிவு அதிகாரிகளும், ஊழியா்களும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில், ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் பேசுகையில், ‘ஊழலுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஒருவாரம் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஊழல் தடுப்பு உள்பட பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com