சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,500 கனஅடியாக சரிந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை 7,500 கனஅடியாக சரிந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை 7,500 கனஅடியாக சரிந்தது.
அணையின் நீா்மட்டம் 9-ஆவது நாளாக 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
நீா்மின் நிலையங்கள் வழியாக 7,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
