இருசக்கர வாகன டயா் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் டயா் வெடித்ததில், பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
Published on

சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் டயா் வெடித்ததில், பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், எஸ்பிபி காலனி, தாஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவா் தனது நண்பா் சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம் ஒழுகுபாறை பகுதியைச் சோ்ந்த முனுசாமியுடன் (40) இருசக்கர வாகனத்தில் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றாா்.

சேலம் நெடுஞ்சாலையில் வைகுந்தம் சுங்கச் சாவடிக்கு முன் உள்ள மேட்டுக்கடை பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின்பக்க டயா் வெடித்தது. இதில், இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். பலத்த காயமடைந்த முனுசாமி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். தினேஷ்குமாா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com