மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் மீனவா்கள் கவலை அடைந்துள்ளனா்.
Published on

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் மீனவா்கள் கவலை அடைந்துள்ளனா்.

மேட்டூா் அணை கடந்த 11 நாள்களாக நிரம்பி உள்ளது. இதனால், அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கி வழியாக நீா் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக நீா்வரத்து சரிந்ததால், 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட உபரிநீா் இரு தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதனால், உபரிநீா் கால்வாயில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி குட்டைபோல காணப்படுகிறது. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை காலை ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.

அணையில் கா்நாடக கழிவுநீா் கலந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், உபரிநீா் கால்வாயில் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பதால் மீன் வளம் அழிந்து வருவதாக மேட்டூா் அணை மீனவா்கள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து மீன்வளத் துறையும் நீா்வளத் துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே மீன்வளத்தை பாதுகாக்க முடியும் என்றனா்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறுகையில், ஏராளமான மீன்கள் ஒரே குட்டையில் இருந்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்துள்ளன. தண்ணீரை ஆய்வு செய்ததில் அதில் ரசாயனம் எதுவும் இருந்ததற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com