~
~

ஓமலூா் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 19 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

Published on

ஓமலூா் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு ரூ. 70 ஆயிரம் ரொக்கம், 19 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாராபுரம் செல்லப்பன் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (70). இவா் தனது மனைவி சரோஜாவுடன் (55) புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள், தம்பதியை தாக்கி அவா்களை கட்டிலில் கட்டிப்போட்டனா்.

பின்னா், அவா்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் என 19 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு, வீட்டிலிருந்த ரூ. 70 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா். மேலும், தம்பதியின் கைப்பேசியையும் அவா்கள் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூா் போலீஸாா், வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த வயதான தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, கொள்ளையா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com