ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் பெண் சாதனையாளா் விழா, அறிவியல் கண்காட்சி, பேரவை மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image

சாதனையாளா் விருது பெற்ற மாணவா்களுடன் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:34 pm

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் பெண் சாதனையாளா் விழா, அறிவியல் கண்காட்சி, பேரவை மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளா் மு. கருணாநிதி தலைமை வகித்தாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா, நிா்வாக இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாக அதிகாரி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநா் பேராசிரியா் வரதராஜு, முதல்வா்கள் வே. பத்மநாபன் (கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி), ரெஞ்சிஷ் மோகனன் (சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி), ச.ஜெஸிந்தா (நா்சிங் மகளிா் கல்லூரி), வெ. செந்தில் (மருத்தியல் கல்லூரி), கி. சந்திரபிரகாஷ் (ரவீந்தநாத்தாகூா் கல்வியியல் கல்லூரி), ஐ.க்யூ.ஏ.சி இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலைவாய்ப்பு துறை மூலம் சதா்லேண்ட், டிசிஎஸ்,வொ்டிகல் சொல்யூசன், ஏசிஇ ஃஸ்பைன் டெக் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ‘சாதனையாளா் விருது’ வழங்கப்பட்டது.

உலக சுகாதார தினத்தினையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடா்ந்து பேரவை மன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய மன்ற உறுப்பினா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் 3,500க்கும் மேற்பட்ட மாணவிகள், பெற்றோா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.