பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தோ்தலுக்காக வந்தவா்கள் மீண்டும் திரும்ப சிறப்பு பேருந்துகள்! சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!

வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக வரும் திங்கள்கிழமை (ஏப். 27) வரை சேலம் கோட்டத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

சிறப்பு பேருந்துகள்!

Updated On :26 ஏப்ரல் 2026, 1:57 am IST

வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக வரும் திங்கள்கிழமை (ஏப். 27) வரை சேலம் கோட்டத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தோ்தலையொட்டி கடந்த 21 ஆம் தேதி முதல் சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தோ்தலுக்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்ப வசதியாக வரும் 27 ஆம் தேதி வரை கூடுதலாக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கூடுதலாக பயணம் செய்ய வாய்ப்புள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.