மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் கைப்பேசிகள்

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3,05,982 மதிப்பில் சிறப்பு செயலியுடன் கூடிய கைப்பேசியை
சேலம் ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் கூடிய கைப்பேசியை வழங்கிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
சேலம் ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் கூடிய கைப்பேசியை வழங்கிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated on

சேலம்: சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3,05,982 மதிப்பில் சிறப்பு செயலியுடன் கூடிய கைப்பேசியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 375 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 20 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், தலா ரூ. 16,999 மதிப்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் கூடிய கைப்பேசி ரூ. 3,05,982 மதிப்பில் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின்கீழ் உறுப்பினா்களாக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வி உதவித்தொகையாக 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி, கல்லூரியில் பயிலும் மாணவா்கள் என 4 பேருக்கு ரூ. 9,000 மற்றும் ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்தொகை ரூ. 12,000 (3 மாதங்களுக்கு) என மொத்தம் ரூ. 21,000-த்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் என்.ஜெயக்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, தாட்கோ மாவட்ட மேலாளா் சு.சக்திவேல் உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com