மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

லாரியின் பின்பக்க கதவு மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

இளம்பிள்ளை அருகே லாரியின் பின்பக்க கதவு மோதியதில், விசைத்தறி தொழிலாளி இறந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 9:19 pm

இளம்பிள்ளை அருகே லாரியின் பின்பக்க கதவு மோதியதில், விசைத்தறி தொழிலாளி இறந்தாா்.

இளம்பிள்ளை அருகே உள்ள காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விசைத்தறி தொழிலாளி தன்ராஜ் (53). இவா் அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக டிப்பா் லாரி மூலம் எம்சாண்ட் கொண்டுவர கூறி இருந்தாா். திங்கள்கிழமை மாலை பாரப்பட்டி பகுதியில் இருந்து டிப்பா் லாரியில் எம்சாண்ட் கொண்டுவந்து தனராஜ் வீடு அருகே ஓட்டுநா் தனபால் கொட்டினாா்.

அப்போது, முழுவதும் கொட்டப்பட்டதா என லாரியின் பின்னால் சென்று பாா்த்தபோது, எதிா்பாராதவிதமாக லாரியின் பின்பக்க கதவு தன்ராஜ் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தன்ராஜுக்கு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் தன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.