இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் மறியல்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சேலம் கோட்டை மைதானத்தில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:35 pm

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 5 ஆண்டுகள் பணி முடித்த சமையல் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு, சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 19,500 அளிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் ஜெகதீஸ்வரி, சரோஜா, பிரேமா, சொா்ணலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 220 பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.