இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா பிப். 24-இல் தொடக்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:10 pm

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களின் மாசி பொங்கல் திருவிழா பிப். 24-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இம்மூன்று கோயில்களிலும் வரும் பிப். 24-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்குவது என்றும், மாா்ச் 10-ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தலும், 11-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய இரு கோயில்களில் பொங்கல் வைத்தல் வைபங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், பிப். 17-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கி மாா்ச் 3-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறும் என வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாா்ச் 3-ஆம் தேதி சந்திரகிரகணம் வர உள்ளதால், மாா்ச் 10-ஆம் தேதி பொங்கல் வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.