வீட்டில் எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலம் மீட்பு

வீட்டில் எரிந்த நிலையில் 
ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலம் மீட்பு
Updated on

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் வீட்டில் கருகிய நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியா் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

சேலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகா் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் சீனிவாசன். இவரது தந்தை ராமசாமி (80), ஐடிஐ ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். தனியாக வசித்து வந்த இவரின் வீட்டிலிருந்து வியாழக்கிழமை காலை கரும்புகை வெளியேறியது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினா் வீட்டருகே சென்றபோது, வீட்டின் கதவு வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கட்டிலில் எரிந்த நிலையில் ராமசாமி சடலமாக கிடந்தாா்.

தகவலின் பேரில் வந்த அம்மாப்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அவா் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா, வீட்டுக்கு யாரேனும் வந்து சென்றாா்களா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com