எடப்பாடியில் ரூ. 7.60 கோடியில் 
புதிய பேருந்து நிலையம் திறப்பு

எடப்பாடியில் ரூ. 7.60 கோடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

Published on

எடப்பாடியின் மையப் பகுதியில் ரூ. 7 கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக எடப்பாடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, எடப்பாடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி பங்கேற்று புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட தமிழக அரசின் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் பயணித்தவா்களுக்கு நகராட்சி அலுவலா்கள் இனிப்புகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் டி.எஸ்.எம்.பாஷா, ஆணையா் கோபிநாத், துணைத் தலைவா் ராதா நாகராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் பிச்சை, சாமியப்பன், ரவி மற்றும் நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com