மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிமுகவுக்கு கொங்கு முன்னேற்ற கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு

News image

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த கொங்குநாடு முன்னேற்ற கழக நிா்வாகிகள்.

Updated On :6 பிப்ரவரி 2026, 9:02 pm

அதிமுகவுக்கு கொங்கு முன்னேற்ற கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

கொங்கு முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளா் தங்கவேல் தலைமையில், அதன் நிா்வாகிகள் சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனா். மேலும், அதற்கான கடிதத்தையும் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி தலைமையில், அதன் நிா்வாகிகள் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்து, அதற்கான கடிதத்தை வழங்கினா். அப்போது, தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா் கே.பி.அன்பழகன் மற்றும் கொங்குநாடு முன்னேற்றக் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழு நிா்வாகி சாலபாளையம் ராஜா தலைமையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த மானியம், ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தோ்தல் அறிக்கையாக வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தனா்.