தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாசன வாய்க்காலில் கழிவுநீா் கால்வாய் அமைக்க எதிா்ப்பு

வாழப்பாடியில் ஏரி பாசன வாய்க்கால் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு...

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 6:59 pm

Syndication

வாழப்பாடி: வாழப்பாடியில் ஏரி பாசன வாய்க்கால் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி பேரூராட்சி, காளியம்மன் நகா் பகுதியில் இருந்து தம்மம்பட்டி சாலைவரை பாப்பான் ஏரியின் பிரதான பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் ஒரு பகுதியில், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்தும் நோக்கில், ரூ. 48 லட்சத்தில் புதிய கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வழக்கறிஞா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில், கழிவுநீா் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி அமா்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

வாழப்பாடி பேரூராட்சி 11, 12, 13-ஆவது வாா்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளிலேயே கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

எனவே,கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டத்தை பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.