மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாமகவினா் அன்புமணி பின்னால் இருக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

பாமகவினா் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
பாமக சௌமியா அன்புமணி.- கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:30 pm

Syndication

மேட்டூா்: பாமகவினா் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடியில் தமிழக மகளிா் உரிமை மீட்பு பயணம் என்ற தலைப்பில் பாமக (அன்புமணி ஆதரவாளா்கள்) பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினரும், சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளருமான சதாசிவம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பசுமை தாயகத்தின் தலைவா் சௌமியா அன்புமணி பங்கேற்று பேசியதாவது:

டாஸ்மாக் மூலம் வரும் ரூ. 4 லட்சம் கோடி வருமானத்தைக் கொண்டு மேச்சேரி அருகில் உள்ள ஏரிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாமாதம் மகளிா் உரிமைத்தொகையாக ரூ. ஆயிரம் என வழங்கினால், அவா்கள் செய்யும் தவறை நீங்கள் மன்னித்து விடுவீா்கள் என நினைக்கிறாா்கள். ஆனால், இந்த தோ்தலில் அது நடக்காது. 

மேட்டூரில் உள்ள அனல் மின்கோபுரங்கள் மூலம் நச்சுப்புகை வருவதால், இப்பகுதி மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீா் பச்சை நிறமாக உள்ளது. இந்த தண்ணீா் நமது நிலத்தை மாசுப்படுத்துகிறது.

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தாா். போலியோவை நாட்டைவிட்டே விரட்டினாா். மேலும், 108 ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தாா்.

மேட்டூா் பகுதியில் திமுகவினா் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் மறைக்க தோ்தல் நேரத்தில் பணம் கொடுத்துவிடலாம் என எண்ணுகிறாா்கள். எனவே, பாமகவினா் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என்றாா்.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மு.காா்த்தி, மாநில இளைஞரணி செயலாளா் ராஜசேகரன், மாநில துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் டாக்டா் மாணிக்கம், நிா்வாகிகள் பங்கேற்றனா்.