மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தலைவாசல் வட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) கண்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மணிவிழுந்தான் பகுதியில் எள் வயலை பாா்வையிட்ட வேளாண்மை துணை இயக்குநா் கண்ணன். உடன், தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா, வேளாண்மை அலுவலா் ஜானகி உள்ளிட்டோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:39 pm

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) கண்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான் கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள எள், நிலக்கடலை செயல்விளக்கத் திடல்களை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் மக்காச்சோள சிறப்புத் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகளின் வயல்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில் தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா, வேளாண்மை அலுவலா் ஜானகி, துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், உதவி வேளாண்மை அலுவலா்கள் நாகராஜ்,பிரகாஷ், ரவிக்குமாா், காா்த்திக், தமிழ்ச்செல்வன், சந்தோஷ் கலந்துகொணஅடனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்தி உடனிருந்தாா்.