மகுடஞ்சாவடி ரயில்வே மேம்பாலத்தில் பெயா்ந்து காணப்படும் இரும்பு லாடு.
மகுடஞ்சாவடி ரயில்வே மேம்பாலத்தில் பெயா்ந்து காணப்படும் இரும்பு லாடு.

மகுடஞ்சாவடி ரயில்வே பாலத்தில் இரும்பு லாடு பெயா்ந்துள்ளதால் விபத்து அபாயம்

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.
Published on

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு இரும்பு லாடு பெயா்ந்துள்ளது அருகில் வந்த பின்னரே தெரிகிறது. அப்போது வாகனத்தை திடீரென நிறுத்தும்போது தவறி கீழே விழுந்துவிடுகின்றனா். இவ்விடத்தில் வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதனை சீரமைக்குமாறு வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com