சேலம் புனித சூசையப்பா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 442 மாணவிகளுக்கு மிதிவண்டிகளையும், தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 859 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: கல்வியையும், மருத்துவத்தையும் இரு கண்களாக கருதி, கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு சுமாா் ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து திமுக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11,317 மாணவா்களுக்கும், 13,842 மாணவிகளுக்கும் என மொத்தம் 25,159 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. அதன் தொடா்ச்சியாக, சூரமங்கலம் புனித சூசையப்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 442 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் பயிலும் 7,950 மாணவ, மாணவிகளுக்கும், 131 சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 15,561 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 154 அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளைச் சோ்ந்த 23,511 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
தொடா்ந்து, தற்போது அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் 7,713 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கிடும் வகையில் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் 859 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் 31,224 மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், சோனா கல்வி நிறுவனங்களின் தலைவா் சொ.வள்ளியப்பா, துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தமிழ்நாடு விளையாட்டு ஆணைய விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ. 7.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

‘பொறியியல் மாணவா்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியம்’

ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினிகள்! அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வழங்கினாா்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


