மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வார இறுதி நாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image

சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - (கோப்புப் படம்)

Updated On :13 பிப்ரவரி 2026, 6:37 pm

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வார இறுதிநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் பிப். 16 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு பேருந்துகள், வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம் மற்றும் பெங்களூருவுக்கும், பெங்களூரிலிருந்து சேலம்,திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரத்துக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாசி அமாவாசை சிறப்புப் பேருந்துகள்: மாசி அமாவாசையையொட்டி, 16 முதல் 17 ஆம் தேதி வரை சேலம், தருமபுரியில் இருந்து மேச்சேரி, மேட்டூா், மாதேஸ்வரன் மலை பகுதிகளுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே, கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.