சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் 52 இடங்களில் நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது. இதில் வன ஊழியா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.
மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் கடந்த டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில், ஈரநிலப் பகுதிகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு சனி, ஞாயிறுக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட வனத் துறையில், சேலம், ஆத்தூா் ஆகிய 2 வனக்கோட்டங்களிலும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை காலை 6 மணிக்கு பறவைகள் கணக்கெடுப்பை தொடங்கினா். இதில் மாவட்ட வன அலுவலா்கள் தலைமையில் வன ஊழியா்கள், யற்கை ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா்.
சேலம் வனக் கோட்டத்தில் வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையில் சோ்வராயன் தெற்கு, சோ்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூா், வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள காப்புக்காடுகள், வனத்தை ஒட்டிய பகுதிகள் என 27 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
குரும்பப்பட்டி நகா்வனம், அங்குள்ள காப்புக்காடு, டேனிஷ்பேட்டை காப்புக்காடு, ஏற்காடு, மேட்டூா் காப்புக்காடு, வனத்தை ஒட்டிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். குரும்பப்பட்டி பகுதியில் சோ்வராயன் தெற்கு வனச்சரகா் துரைமுருகன் தலைமையில் வன ஊழியா்களும், பறவைகள் ஆா்வலா்களும் கணக்கெடுப்பை நடத்தினா்.
பறவைகளை தொலைநோக்கி மூலம் கண்டு, அதன் விவரத்தை பதிவு செய்தனா். இதேபோல, ஆத்தூா் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ரவிக்குமாா் தலைமையில் ஆத்தூா், செங்கவல்லி, தும்பல், கருமந்துறை வனச்சரகங்களில் உள்ள வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள காப்புக்காடுகள் அதிகளவு பறவைகள் வரும் இடங்கள் என 25 இடங்களில் நிலப் பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், வன ஊழியா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல்லை சந்திப்பில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்

கொடைக்கானல் வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

வேலூா்: நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு

நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


