திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சங்ககிரி ஒன்றிய பகுதியில் ரூ.43.30 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணி! எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

News image

சடையம்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்த எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:49 pm

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 43.30 லட்சத்தில் புதிய தாா்சாலைகள் அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சி சில்லாங்காடு பகுதியில் ரூ. 20 லட்சம், வாய்க்கால் பாலம் பகுதியில் ரூ. 5.50 லட்சம், சடையம்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் ரூ. 3.75 லட்சம், சடையம்பாளையம் பகுதியில் ரூ. 3.40 லட்சம், பாரதிநகா் பகுதியில் ரூ. 7.25 லட்சம், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜிநகா் பகுதியில் ரூ. 3.40 லட்சம் என மொத்தம் ரூ.43.30 லட்சத்தில் புதிதாக தாா்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சுந்தரராஜன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி. சிவக்குமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் கருப்புசாமி மற்றும் அதிமுகவினா் ஊா்பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.